ரஜினிகாந்த் ஸ்டைலில் வெங்கடேஷ் ஐயர் தனது சத்தத்தை கொண்டாடியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் சகலதுறை துடுப்பட்ட வீரர் வெங்கடேஷ் ஐயர், விஜய் ஹசாரே கோப்பைக்கான தொடரில் இன்று சதம் நிறைவு செய்ததை நடிகர் ரஜினிகாந்த் ஸ்டைலில் கொண்டாடியுள்ளார்.
அத்தோடு தான் சூப்பர் ஸ்ரார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பதை அவர் பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ரஜினிகாந்தின் பிறந்த நாளான இன்று சதம் அடித்துள்ளார்.
அது மட்டிமில்லாமல் தனது நாயகன் ரஜினி ஸ்டைலில் ‘சல்யூட்’ அடித்தும், கண்ணாடியை ஸ்டைலாக ரஜினி போல திருப்பி போடுவது போலவும் மைதானத்தில் வெங்கடேஷ் சந்தோசத்தை வெளிக்காட்டியுள்ளார்.
சண்டிகர் அணிக்கு எதிரான போட்டியில் மத்திய பிரதேச அணிக்காக இன்று நடைபெற்ற போட்டியில் 113 பந்துகளில் 151 ரன்களை எடுத்த அவர் ரஜினி ஸ்டைலில் தனது சதத்தை கொண்டாடியுள்ளார்.
அத்தோடு தான் சூப்பர் ஸ்ராரின் தீவிர ரசிகன் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#sports
Leave a comment