மரக்கறி பொருட்களின் விலைகள் அதிகரிக்க சாத்தியம் உள்ளன என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நுவரெலியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மரக்கறி போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது என அகில இலங்கை கூட்டு விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நுவரெலியாவுக்கு வியாபாரிகள் செல்லாத நிலையில், மரக்கறி ஏற்றுமதி தடைப்பட்டுள்ளது.
இதனால் சில மரக்கறிகள் பழுதடைந்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews