வலிகாமம் வடக்கு பிரதேச சபை பாதீடு வெற்றி

20211130 112844

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளார் சோ.சுகிர்தனால் இன்று சபையில் முன்வைக்கப்பட்டது.

39 உறுப்பினர்களைக் கொண்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் இன்று கலந்துகொண்ட 29 உறுப்பினர்களும் வரவு செலவு திட்டத்திற்கு தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

இன்றைய சபை அமர்வில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 7 உறுப்பினர்களும், தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தல உறுப்பினரும் கலந்துகொள்ளாத அதே வேளை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் புதிய உறுப்பினர் ஒருவரும் இதுவரை நியமிக்கப்படவில்லை.

வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 17 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 8 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 6 உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 3 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா 2 உறுப்பினர்களும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Exit mobile version