சடலமாக மீட்கப்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் !

1638335943 tna 2

வலிகாமம் கிழக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் சுப்பிரமணியம் சிவபாலன் (வயது 51) என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில் அருகில் இருந்த காணியில் இருந்து அயல்வீட்டுக்காரருக்கு துர்நாற்றம் வீசவே, உடனடியாக சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடு ஒன்றிலிருந்து வெளிநாட்டவர் ஒருவருடைய தென்னம் காணியை குத்தகைக்கு எடுத்து பராமரித்த வேளை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரியவருகிறது.

#SriLankaNews

Exit mobile version