20 – 30 வயதுப்பிரிவினருக்கு நாளை முதல் தடுப்பூசி!

178818 vaccine

கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 20-30 வயதுப் பிரிவினர் 28 ஆயிரத்து 482 பேர் உள்ளனர். அவர்களுக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்றும் பணி நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது என மாவட்ட தொற்றுநோயியல் வைத்தியர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை 20ம் திகதி கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், தர்மபுரம் மத்திய கல்லூரி, முழங்காவில் ஆதார வைத்தியசாலை மற்றும் பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

21ம் திகதி செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலை, அக்கராயன் மகா வித்தியாலயம், இராமநாதபுரம் மகா வித்தியாலயம், முழங்காவில் ஆதார வைத்தியசாலை, தர்மபுரம் மத்திய கல்லூரி, பளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என்பவற்றிலும் தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version