தேவையற்ற விடயங்களுக்காக வீட்டை விட்டு வெளியே செல்வோர் கைதுசெய்யப்படுவர் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடேர்டே நாட்டு மக்களுக்கு எச்சரித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனாத் தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில், மிக இறுக்கமான கட்டுப்படுகை விதித்துள்ள பிலிப்பைன்ஸ் அரசு, கொரோனாத் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் வெட்ட விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் தடுப்பூசி செலுத்தாதவர்கள் வெளியே சென்று வரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் கொரோனாத் தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், நாளாந்த பாதிப்பு 17 ஆயிரத்தை தொட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#World
Leave a comment