நைஜரில் நிலவும் மோசமான பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகள் தமது பிரஜைகளுக்கு அந்நாட்டிற்குப் பயணிப்பதைத் முற்றிலுமாகத் தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளன.
அமெரிக்க வெளியுறவுத் துறை, இந்த எச்சரிக்கை தொடர்பாக ஒரு தெளிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நைஜரில் உள்ள தமது தூதரகத்தின் மூலம் ஆதரவைப் பெற முடியாது என்றும், அவசர சூழ்நிலைகளில் “அமெரிக்கா மீது நம்பிக்கை வைக்க வேண்டாம்” எனவும் குறிப்பிட்டுள்ளது.
கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் நைஜரை “அதிக அபாயம் உள்ள நாடு” (High-Risk Country) என வகைப்படுத்தியுள்ளன.
இந்த நாடுகள் தமது குடிமக்களை அவசர தேவையின்றி நைஜருக்குப் பயணிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளன.
நைஜரில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பாதுகாப்பு நெருக்கடிகளின் பின்னணியில் இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.