இந்தியாவிற்கு வருகிறார் அமெரிக்க தளபதி!

usa 1

usa

அமெரிக்க கடற்படை தளபதி இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அமெரிக்க கடற்படை தளபதி மைக் கில்டே இந்த வாரம் இந்தியா வருவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பயணத்தின்போது இந்திய கடற்படை தளபதி கரம்பிர் சிங் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடனும், அரசு அதிகாரிகளுடனும் அமெரிக்க கடற்படைத் தபதி சந்திப்புகளை நடாத்தவுள்ளார்.

இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இந்த பயணம் அமையவுள்ளதாக அமெரிக்க கடற்படை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version