முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலம் புனரமைப்பு: இரவு பகலாகத் துரித கதியில் முன்னெடுக்கப்படும் பணிகள்!

New Project 4

சீரற்ற வானிலை காரணமாகச் சேதமடைந்திருந்த முல்லைத்தீவு A35 வட்டுவாகல் பாலம் மற்றும் அதனைச் சார்ந்த வீதிப் பகுதி தற்போது மிகத் துரித கதியில் சீரமைக்கப்பட்டு வருகின்றது.

கடந்த சில நாட்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவிய கடும் மழை மற்றும் காற்று காரணமாகக் குளங்கள் மற்றும் கடலின் நீர்மட்டம் வழமையை விட அதிகரித்தது.

நீர்மட்டம் உயர்வடைந்ததால், நந்திக்கடல் மற்றும் கடலை இணைக்கும் வட்டுவாகல் பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்து, போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் தற்காலிகப் பாதையின் மூலம் போக்குவரத்து வழமைக்குக் கொண்டுவரப்பட்டது.

தற்போது பாலத்தின் நிரந்தரப் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மக்களின் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இரவு பகலாகத் துரித கதியில் திருத்த வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவு – பரந்தன் ஏ35 பிரதான வீதியில் அமைந்துள்ள இந்தப் பாலம், மாவட்டத்தின் மிக முக்கியமான போக்குவரத்து மையமாகும். இதன் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்தால், பயணிகள் மற்றும் கனரக வாகனங்கள் எவ்விதத் தடையுமின்றி மீண்டும் பாதுகாப்பாகப் பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Exit mobile version