மலையக அரசியல் அரங்கம் ஆரம்பம்!

261797583 10228737010635558 2823760125332662289 n

நுவரெலியா மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியல் செயற்பாட்டாளருமான  மயில்வாகனம் திலகராஜ் தலைமையில் ‘மலையக அரசியல் அரங்கம்’ எனும் பெயரில் புதியதொரு அரசியல் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது .

உதயமாகியுள்ள இவ்வமைப்பானது சமூக அரசியலை இலக்காகக்கொண்டு ‘உரிமை சார்’ பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. என்று அதன் தலைமை ஒருங்கிணைப்பாளரான மயில்வாகனம் திலகராஜ் இன்று தெரிவித்துள்ளார்.

தலவாக்கலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே  மயில்வாகனம் திலகராஜ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

குறித்த அமைப்பானது அரசியல் கட்சியாகவோ அல்லது தொழிற்சங்கமாகவோ அல்லாது சமூக அரசியலை முன்னெடுப்பதற்கான அமைப்பு  என்பதால் அதில் எவரும் இணையலாம்.

புதிய அரசியலமைப்புக்கான பணிகள் மற்றும் தேர்தல் முறைமை மறுசீரமைப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் இடம்பெற்றுவரும் சூழ்நிலையில் ‘அரசியல் சார்’ கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு இவ்வாறானதொரு அமைப்பின்  தேவைப்பாட்டை உணர்ந்தே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதுடன்  ‘மாவட்ட எல்லைகளை கடந்த மலையக அரசியல்’ என்ற எண்ணக்கரு பிரதான செயற்பாட்டுத் தளமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

மலையகத்தின்  பிரதிநிதித்துவ அரசியல் 1921 ல் இருந்தே ஆரம்பித்த  நூற்றாண்டு பழமை வாய்ந்தது என்பதை எடுத்துக்காட்டுவதாகவும் அமைகின்றது” என அமைப்பு குறித்து  விளக்கமளித்தார்.

#SriLankaNews
Exit mobile version