சீரற்ற காலநிலை காரணமாக பதுளை – அட்டாம்பிட்டிய பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
குறித்த மண்மேடு அட்டாம்பிட்டிய பகுதியில் இரண்டாம் பிரிவு தோட்டத்தின் 08 ஆம் இலக்க லயன் குடியிருப்புக்கு அயலிலேயே விழுந்துள்ளது.
அத்தோடு குடியிருப்புகளுக்குள் வெள்ளநீரும் உட்புகுந்துள்ளமையால் இப்பகுதி மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
தொடர்ந்து நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தது.
#SriLankaNews