சீரற்ற காலநிலை – 7 பேர் பாதிப்பு

rains 2 1

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு வீடு சேதமடைந்துள்ளதோடு 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார்.

யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாவாந்துறை J/84 கிராம சேவையாளர் பிரிவில் காற்றுடன் கூடிய மழையின் தாக்கத்தினால் ஒரு வீடு சேதம் அடைந்துள்ளது.

குறித்த குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்குரிய தற்காலிக இருப்பிட வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் குறித்த நாவாந்துறையில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரடியாக சென்று தற்காலிக இருப்பிடத்துக்குரிய வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் தெரிவித்தார். தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version