சீரற்ற காலநிலை – காரைநகரில் 632  பேர் பாதிப்பு

rains 2 1

தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 183 குடும்பங்களைச் சேர்ந்த 632  நபர்கள் காரைநகரில் பாதிக்கப்பட்டுள்ளனரென மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போதைய காலநிலை தொடர்பாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இன்று மாலை நான்கு மணிவரையான நிலவரம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், நேற்று முதல் பெய்தமழை மற்றும் அதிக காற்று  காரணமாக 183 குடும்பங்களைச் சேர்ந்த 632  நபர்கள் காரைநகரில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் இரண்டு குடும்பத்தினர் தற்காலிகமாக உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.

#SriLankaNews

Exit mobile version