” தற்போதைய சூழ்நிலையில் மின் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது.” – என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே இன்று தெரிவித்தார்.
அத்துடன், தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு நேற்று தெரிவித்திருந்தது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அமைச்சர் இவ்வாறானதொரு அறிவிப்பை விடுத்துள்ளார்.
#SriLankaNews

