யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
சுன்னாகத்தைச் சேர்ந்த சாருகா என்பவரே இவ்வாறு வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சுன்னாகத்தை சேர்ந்த இந்த மாணவி உடுவில் மகளிர் கல்லூரியில் முதன்மை மாணவியாக திகழ்ந்துள்ளார்.
அண்மையில் வெளியான பல்கலைக்கழக பரீட்சை முடிவுகளிலும் நிறைவான புள்ளிகளைப் பெற்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
கற்றல் சுமை காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்படும் வேளையில் இறப்புக்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.