வெள்ளை மாளிகையில் ஜெலன்ஸ்கி – டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பு இன்று

image 1000x630 2

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர பல நாடுகள் முயற்சித்தபோதும் பேச்சுவார்த்தைகள் தோல்வியிலேயே முடிந்துள்ளன. இந்தப் போரால் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து அண்டை நாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்தச் சூழலில்தான், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இன்றைய தினம் ஜனாதிபதி ட்ரம்ப்பை சந்தித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்தச் சந்திப்பின்போது உக்ரைனின் பாதுகாப்பு, ஆற்றல் தேவைகள் மற்றும் ரஷ்யா மீதான தடைகளை அதிகரிப்பது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.காரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version