ரஷ்யாவிடமிருந்து 1,000 உக்ரேனிய வீரர்களின் உடல்களைப் பெற்றதாக உக்ரைன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இது போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினருக்கும் இடையிலான சமீபத்திய உடல் பரிமாற்ற நடவடிக்கையாகும்.
ரஷ்யாவிடமிருந்து 1,000 உக்ரேனிய வீரர்களின் உடல்களை உக்ரைன் பெற்றுள்ளது. இதற்கு ஈடாக 30 ரஷ்ய வீரர்களின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதாக ரஷ்ய அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புலனாய்வாளர்களும் நிபுணர்களும் விரைவில் அனைத்துப் பரிசோதனைகளையும் மேற்கொண்டு, பெறப்பட்ட உடல்களை அடையாளம் காண்பார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை மீட்டு, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் மனிதாபிமான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.