உலகம்செய்திகள்

டுபாய் விமான கண்காட்சியில் சோகம்: சாகசத்தில் ஈடுபட்ட இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு!

Share

டுபாயில் நடைபெற்று வந்த விமானக் கண்காட்சியின் இறுதி நாளான இன்று (நவம்பர் 21), இந்திய விமானப்படையின் உள்நாட்டுத் தயாரிப்பான தேஜஸ் (Tejas) போர் விமானம் சாகசத்தில் ஈடுபட்டபோது விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தை இயக்கிய விமானி பரிதாபமாக உயிரிழந்தார்.

நவம்பர் 17ஆம் திகதி முதல் நடைபெற்று வந்த டுபாய் விமானக் கண்காட்சியின்போது இந்தச் சோகச் சம்பவம் நிகழ்ந்தது. இன்றைய அட்டவணையில் மூன்றாவது சாகசமாகத் தேஜஸ் விமானம் இடம்பெற்றிருந்த நிலையில், அது கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளதுடன், விமானி உயிரிழந்தார் என்ற தகவலையும் தெரிவித்துள்ளது. இந்திய விமானப்படை தனது X (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில்:

“டுபாய் விமான கண்காட்சியில் இந்திய விமானப் படையின் தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார். அவரது இழப்புக்கு இந்திய விமானப்படை ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்தத் துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருடன் இந்திய விமானப்படை துணை நிற்கிறது.”

விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் மக்கள் யாரும் இல்லாததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேஜஸ் விமானத்தைப் பார்க்கப் பார்வையாளர்கள் அதிகம் கூடியிருந்ததாகவும் கூறப்பட்டது.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...