திமுக இளைஞரணி செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலின்

1796157 udhayanidhi

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இளைஞரணி துணைச் செயலாளர்களாக ஜோயல் உள்பட 9 பேர் நியமிக்கப்படுவதாக திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை விடுத்துள்ளார். இதேபோல், திமுக மகளிர் அணி தலைவராக விஜயா தாயன்பன், மகளிர் அணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திமுகவின் மகளிர் அணி செயலாளராக இருந்த கனிமொழி, அண்மையில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரானார். துணைப் பொதுச்செயலர் ஆன பிறகும் மகளிர் அணி செயலர் பொறுப்பை கனமொழி கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#India

Exit mobile version