உபெர் சேவை தற்போது வாட்ஸ்அப்பில் அறிமுகமாகியுள்ளது.
இந்தியா நிறுவனமாகிய உபெர் வாட்ஸ்அப் சாட்பாட் சேவையை பயன்படுத்தி உபெர் ரைடு முன்பதிவு செய்யும் வசதியை தற்போது அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் உபெர் செயலியை இன்ஸ்டால் செய்யாதவர்களும் உபெர் ரைடுகளை முன்பதிவு செய்யலாமென அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
உபெர் செயலியில் மேற்கொள்ளப்படும் பயனாளர் பதிவு, ரைடு முன்பதிவு, பயணத்திற்கான சீட்டுக்கள் உள்ளிட்டவைகளை வாட்ஸ்அப் சாட்பாட் மூலமாகவே பெற்றுக் கொள்ள முடியும் என உபெர் இந்தியா தெரிவித்துள்ளது.
உலகளவில் இதுபோன்ற வசதி முதல்முறையாக இந்தியாவில் தான் அறிமுகம் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆங்கில மொழியில் வரும் இச்சேவை மிகவிரைவில் இந்தியா முழுவதும் வழங்கப்படுமென அந்நிறுவனத்தில் நிறைவேற்றதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#india