செய்திகள்இலங்கை

அனர்த்த நிவாரணம்: ஐக்கிய அரபு இராச்சியத்தின் இரண்டாவது உதவி விமானம் இலங்கையை வந்தடைந்தது!

Share

சர்வதேச ஒற்றுமையின் குறியீடாக, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரண்டாவது உதவிப் பொருட்களை ஏற்றிய ஐக்கிய அரபு இராச்சிய விமானப்படையின் C-17 Globe master விமானம் இன்று (டிசம்பர் 2) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தது.

இந்த உதவியை ஐக்கிய அரபு இராஜ்ஜிய நிவாரணக் குழுவின் தலைவர் கலாநிதி ஹமூத் அல் அபாரி உத்தியோகபூர்வமாக கையளித்தார். இலங்கையின் சார்பாக தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு ஆகியோர் உதவிப் பொருட்களை பொறுப்பேற்றனர்.

இந்த உதவிப் பொருட்களிடையே ஒரு குடும்பத்திற்கு 10 நாட்களுக்கு போதுமான 1,116 உலர் உணவுப் பொதிகள் மற்றும் தண்ணீர் போத்தல்கள், கூடாரங்கள், போர்வைகள், மெத்தைகள், சமையல் பாத்திரங்கள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் அடங்கிய 336 நிவாரணப் பொதிகள் என்பன அடங்கும்.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் முதலாவது உதவித் தொகை நேற்று (01) நாட்டை வந்தடைந்தது.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...