கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் இருவர் பலி!

202105010125453755 Death at bday party Victims sister among five of family SECVPF

மிருக வேட்டைக்கு பயன்படுத்தப்படும் கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார் படுகாயமடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

திருப்பனே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முரியாகல்ல பகுதியில் நேற்று (23) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் 60 மற்றும் 44 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர் .

மூவர் குறித்த பகுதியால் சென்றுக்கொண்டிருந்தபோது, இருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

இதன்போது ஊர் மக்களுக்கு தெரியப்படுத்தச் சென்ற மூன்றாவது நபர் மீது வேறு ஒரு கட்டுத் துப்பாக்கி வெடித்து அவரும் காயங்களுக்கு உட்பட்டுள்ளார்

இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் .

Exit mobile version