நாட்டில் வாகன விபத்துக்களைத் தவிர்க்கும் முகமாக அனைத்து பஸ் சாரதிகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இந்த பயிற்சியானது இரண்டு வாரங்களுக்கு வழங்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ் வருடம் ஜனவரி முதல் தற்போது வரையான காலப்பகுதியில் வாகன விபத்துக்களால் ஆயிரத்து 948 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை கடந்த இரண்டரை மாதங்களில் வாகன விபத்துக்களால் 27 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்
சாரதிகளிடம் காணப்படும் ஒழுக்கமின்மையே இந்த விபத்துகளுக்கு காரணமாகும். இந்த நிலையிலேயே குறித்த பயிற்சி திட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ்,செயற்படுத்தப்படவுள்ள இந்த பயிற்சித் திட்டமானது சிறந்த பலனை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews