பிரித்தானியாவின் Salisbury நகரில் இரண்டு புகையிரதங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இவ்விபத்துச் சம்பவத்தில் ஏராளமானோர் காயமடைந்தனர்.
வேகமாக சென்ற புகையிரதம் தடம் புரண்டதால் Salisbury புகையிரத நிலையம் அருகே உள்ள சுரங்கப்பாதையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
புகையிரதத்தில் சிக்கியிருந்த பயணிகள் அனைவரும் ஜன்னல் வழியாக வெளியே கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மற்றும் சேத விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#world
Leave a comment