டுபாயில் பிடிபட்ட பாதாள உலகக் கும்பலின் முக்கிய புள்ளிகள் இலங்கை அழைத்து வரப்பட்டனர்: மோசடிப் பெண் ஒருவரும் கைது!

1768544936 MediaFile 1

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் நகரில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்ட, இலங்கையின் பாதாள உலகக் குழுவின் இரண்டு முக்கிய உறுப்பினர்கள் மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுக்குள்ளான பெண் ஒருவர் இன்று (16) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அழைத்து வரப்பட்ட இரண்டு நபர்களும் இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு கொலைச் சம்பவங்கள் மற்றும் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கை மற்றும் டுபாய் புலனாய்வுப் பிரிவினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் ஊடாக இவர்கள் கைது செய்யப்பட்டு, இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகப் பலத்த பாதுகாப்புடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இவர்களுடன் சேர்த்து அழைத்து வரப்பட்ட பெண், கல்கிசை (Mt. Lavinia) பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் இலங்கையில் அரச பணத்தைப் பாரிய அளவில் மோசடி செய்தமை தொடர்பாக நீண்டகாலமாகத் தேடப்பட்டு வந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்ட மூவரிடமும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இவர்கள் வெளிநாடுகளில் இருந்துகொண்டு இலங்கையில் முன்னெடுத்த சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் நிதி மோசடிகளின் பின்னணி குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Exit mobile version