நீட் தேர்வால் பலியான இரண்டு உயிர்கள்! தமிழகத்தில் அதிர்ச்சி!
இந்தியாசெய்திகள்

நீட் தேர்வால் பலியான இரண்டு உயிர்கள்! தமிழகத்தில் அதிர்ச்சி!

Share

நீட் தேர்வால் பலியான இரண்டு உயிர்கள்! தமிழகத்தில் அதிர்ச்சி!

சென்னையில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தந்தையும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் ஜெகதீஸ்வரன் (19) இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியுள்ளார்.

இந்த நிலையில் 2 முறை தேர்வு எழுதியும் தோல்வியைடந்ததால் ஜெகதீஸ்வரன் மனமுடைந்தார். அதே சமயம் தன்னுடன் பயின்ற சில மாணவர்கள் பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்ததும், இருவர் தனியார் மருத்துவ கல்லூரியில் பணம் செலுத்தி சேர்ந்ததும் தெரிய வந்ததால் ஜெகதீஸ்வரன் விரக்தியில் இருந்துள்ளார்.

இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஜெகதீஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பொலிஸார் விசாரணைக்கு பிறகு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மகனை இழந்த சோகத்தில் தந்தை செல்வமும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் செல்வத்தின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நீட் தேர்வு தோல்வி விரக்தியில் மாணவன் உயிரிழந்த நிலையில், தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...