கொழும்பு கிராண்ட்பாஸ் பாலத்துறை பிரதேசத்தில் கட்டப்பட்டு வந்த வீடு இடிந்து விழுந்துள்ளது இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் வீட்டு நிர்மாண பணியில் ஈடுபட்டிருந்த கட்டட நிர்மாண தொழிலாளியும் அயல் வீட்டில் இருந்த 14 வயதான சிறுவனுமே சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரும் அருகில் இருந்தவர்களால் மீட்டுள்ளனர். அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனனர்.
சம்பவம் குறித்து கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#srilankanews
Leave a comment