image 1000x1000 1
செய்திகள்இலங்கை

கோர விபத்து: அநுராதபுரத்தில் யாழ் பெண் உட்பட இருவர் பலி, 8 பேர் காயம்

Share

அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் ஏழாலையைச் சேர்ந்த 31 வயதுடைய அகிலன் திவ்யா என்ற பெண்ணும், 60 வயதுடைய மற்றுமொரு பெண்ணும் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த வாகனம் அநுராதபுரம் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் வாகனத்தில் பயணித்த இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 8 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து அநுராதபுரம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கிளிநொச்சியிலிருந்து கற்களை ஏற்றியவாறு யாழ்ப்பாணத்திற்கு பயணித்த டிப்பர் வாகனம் ஒன்று, சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதோடு, கடைத் தொகுதி ஒன்றுக்குள்ளும் புகுந்தது.

இதனால் கடைத் தொகுதியின் வாசல் கதவுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த டிப்பர் வாகனத்தின் சாரதி சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...