காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்வொன்று தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்டு மக்களிடம் உரையாற்றினார்.
மக்களால் அமைக்கப்படும் ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்துப் பேசுகையில், அவர் பின்வரும் முக்கிய உறுதிமொழிகளை அளித்தார்:
மக்களால் அமைக்கப்படும் ஆட்சியில் அனைவருக்கும் நிரந்தர வீடு வழங்க வழிவகை செய்யப்படும். குடும்பத்தில் வீட்டிற்கு ஒரு உந்துருளி (Motorcycle) வாகனம் இருக்கும் வகையில் வழிவகை செய்யப்படும். வேலைவாய்ப்பைப் பெருக்கும் வகையில் தமிழகப் பாடத் திட்டத்தை மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சட்டம் ஒழுங்கை மிகச் சிறப்பாக வைத்து, அனைவருக்குமான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் வலியுறுத்தினார்.