பௌத்த எச்சங்கள், இந்து மத ஸ்தலங்களில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்கின்ற பொழுது அடையாளம் காணப்படுவதால் தான் பிரச்சினை என தொல்பியல் திணைக்கள பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் அண்மைக் காலமாகவே இந்துக்கோவில் என்ற வகையில் பூசைகள் இடம்பெற்று வருகின்றது. ஆனால் அங்கு பௌத்த விகாரைகளின் சிதைவுகளே காணப்பட்டதாகத் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்;
இது ஒரு முக்கியத்துவமான பிரச்சனை என்ற வகையில் இனங்களிற்கிடையே பிளவை ஏற்படுத்தக்கூடாத வகையில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் வண்ணம் இந்த விடயத்தைப் பார்க்கவேண்டும்.
இந்து வணக்கஸ்தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில், ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்ற பொழுது பௌத்த சின்னங்களை அங்கு அவதானிக்க முடிகின்றது.
அவ்வாறான இடங்களில் புதிதான விடயங்களை திணிப்பதாக தவறான நிலைப்பாடு ஒன்றும் காணப்படுகிறது. தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களமானது அனைத்து சமயங்களிற்கும் மதிப்பளித்து செயற்படும்.
பொதுமக்கள் இவ்வாறான பிரச்சினைகள் உள்ளது என்பது தொடர்பில் தமக்கு அறியத்தந்தால், அவ்வாறு பிரச்சினைகள் இருப்பின் அது தொடர்பில் ஆராய்ந்து, நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
#SrilankaNews
Leave a comment