யாழ் மாநகர சபை அமர்வில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி!

தியாகதீபம் திலீபனுக்கு யாழ்பாணம் மாநகர சபை அமர்வில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு காவல்துறையினரின் செயற்பாடுகளுக்கு எதிராக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று (28) யாழ்ப்பாணம் மாநகர சபைபின் மாதாந்த அமர்வு மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது .

இதன் ஆரம்பத்தில் தியாகி திலீபனுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதுமட்டுமின்றி கடந்த 23 ஆம் திகதி திலீபனின் நினைவிடத்தில் யாழ் மாநகரசபை உறுப்பினர் ரஜீவ்காந் யாழ்ப்பாண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டமை மற்றும் ஏற்றிய தீபத்தை காவல்துறையினர் காலால் தட்டிவிட்டமை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

jaff municipal 1 1

Exit mobile version