யாழ். பல்கலைக் கழகத்தில் மாவீரர்களுக்கு, மலரஞ்சலி செலுத்தி வணக்கம் செலுத்தப்பட்டது.
ஆண்டுதோறும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினத்தை முன்னிட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருவது வழமை.
இந்த நிலையில், மாவீரர் வாரத்தை முன்னிட்டு இன்றைய தினம் பல்கலைக்கழக மாணவர்களினால் மலரஞ்சலி செலுத்தி முழந்தாளில் இருந்து மாவீரர்களுக்கு தமது அஞ்சலியை செலுத்தினர்.
மாவீரர் தினத்தை முன்னிட்டு பல்கலைக்கழக சூழலில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இராணுவ பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மாணவர்கள் தமது அஞ்சலிகளை ஆத்மார்த்தமான முறையில் செலுத்தினர்.
#SriLankaNews