இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் (TRCSL) கதிரியக்க அதிர்வெண் (Radio Frequency) முகாமைத்துவத்தை நவீனமயப்படுத்தும் நோக்கில், Automated Spectrum Management System (ASMS) எனும் புதிய தானியங்கி முறைமையைக் கொள்வனவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது TRCSL பயன்படுத்தி வரும் SPECTRAplus முறைமையானது கடந்த 2001 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாட்டில் உள்ள இந்த பழைய முறைமையால் தற்போதைய அதிவேகத் தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் கண்காணிப்புப் பணிகளை வேகமாகவும் துல்லியமாகவும் மேற்கொள்ள உதவும்.
மனிதத் தலையீடுகளைக் குறைத்து, தொழில்நுட்ப ரீதியான பிழைகளைத் தவிர்க்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 5G மற்றும் அதற்கு மேலான மேம்பட்ட தொலைத்தொடர்பு சேவைகளை நிர்வகிக்க இந்த ASMS முறைமை இன்றியமையாதது.
தொலைத்தொடர்பு துறையில் நிலவும் அலைக்கற்றை நெரிசலைக் குறைக்கவும், சேவை வழங்குநர்களுக்கு வினைத்திறனான முறையில் அதிர்வெண்களைப் பகிர்ந்து வழங்கவும் இந்த நவீன முறைமை வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

