இந்தியா- ஆந்திரத்தின் விஜயநகர மாவட்டத்திற்கு உள்பட்ட தொடருந்து நிலையம் ஒன்றில் இரு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தினால் இதுவரை 19 பேர் பலியாகியுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டதாகக் கூறப்படுகிறது.
இக்கோர விபத்தால் அப்பகுதி முழுக்க பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன் பெட்டிகளுக்குள் சிக்கிய பயணிகளை மீட்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.