முரசுமோட்டையில் கோர விபத்து: 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி; ஒருவர் படுகாயம்!

26 6964df8a83bee

பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில் முரசுமோட்டை நரசிம்மன் கோவிலுக்கு அருகில் இன்று (12) மாலை இடம்பெற்ற பயங்கர விபத்தில் நால்வர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இன்று மாலை சுமார் 5:00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தின் வீரியம் காரணமாக நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிவேகமாக வந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், உயிரிழந்தவர்களின் சடலங்களைப் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர். விபத்தில் சிக்கியவர்கள் யார்? எங்குச் சென்றார்கள்? என்பது குறித்த விபரங்களைச் சேகரித்து வரும் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Exit mobile version