drowning
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னாாரில் தைப்பொங்கல் சோகம்: கடலில் நீராடச் சென்ற இருவர் உயிரிழப்பு – ஒருவர் காணாமல் மாயம்!

Share

மன்னார், பேசாலை கடற்பரப்பில் நீராடச் சென்ற நான்கு இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாகக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிய பின்னர், இன்று (15) பிற்பகல் நான்கு நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து பேசாலை கடலில் நீராடுவதற்காகச் சென்றுள்ளனர். கடலில் நீராடிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட நீரோட்டத்தில் நால்வரும் சிக்கியுள்ளனர்.

நீரில் மூழ்கிய நிலையில் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மற்றுமொரு இளைஞர் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ள நிலையில், கடற்படையினரும் காவல்துறையினரும் அவரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நால்வரில் ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு, தற்போது மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தைப்பொங்கல் மற்றும் விடுமுறை தினங்களில் கடற்கரைகளுக்குச் செல்வோர் கடலின் சீற்றம் குறித்து அவதானமாக இருக்குமாறும், பாதுகாப்பற்ற இடங்களில் நீராடுவதைத் தவிர்க்குமாறும் காவல்துறையினர் மற்றும் கடற்படையினர் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றனர்.

 

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...