யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

images 5 7

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் நோர்வேயில் வசித்து வந்த நிலையில் அண்மையில் இலங்கைக்கு வந்துள்ளார்.

கை கழுவுவதற்காகக் கிணற்றுக்கு அருகில் சென்றவேளை எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். பின்னர் கிணற்றிலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version