மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தொழிற்சந்தை நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட செயலக மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் இணைப்பாளர் கருணாகரனின் ஒருங்கிணைப்பில், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற தொழிற்சந்தை நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்,
யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில் அற்றவர்களுடைய வீதம் சராசரியாக ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும்போது சற்று அதிகமாக காணப்படுகின்றது
யாழ்ப்பாண மாவட்டத்தில் இளைஞர் யுவதிகள் அரசதுறை வேலைவாய்ப்பை நாடுவதன் காரணமாகவே யாழ் மாவட்டத்தில் தொழில்அற்றவர்களுடைய எண்ணிக்கை மாவட்டத்தில் அதிகரித்து காணப்படுகின்றது.
இதற்கு பிரதானமான காரணம் பாடசாலைகளில் தொழில் வழிகாட்டி செயல் முறைகளை நாம் ஒழுங்காகச் ஏற்படுத்திய போதிலும் அதனை மாணவர்கள் சரியாக பின்பற்றாமையே பிரதானமான காரணமாகும்
யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய நிலையில் 11 வேலை தருணங்களை இங்கு அழைத்திருக்கின்றோம்
175 வேலைவாய்ப்புகள் வெற்றிடமாக காணப்படுவதாக அந்த வேலை வாய்ப்புகளை இங்கு வேலை தேடி வந்து இருப்பவர்கள் அதனை பெற்றுக்கொள்ள முடியும்.
ஆனால், நமது பெற்றோர்கள் மாணவர்களிற்கு கல்வியை போதிப்பது மட்டுமல்லாது உரிய தொழில் வழிகாட்டி தொடர்பிலும் அக்கறையாக செயற்படுவதன் மூலம் எதிர்காலத்தில் எமது மாவட்டத்தில் வேலையற்றோரின் எண்ணிக்கையை குறைக்க முடியும் – என்றார்.
#SriLankaNews