கிளிநொச்சியில் இருந்து கதிர்காமத்துக்கு சுற்றுலா சென்ற பேருந்து இன்று (19) அதிகாலை பதியத்தலாவை பகுதியில் வீதியை விட்டு விலகி மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர் என பபொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை இரவு கதிர்காமத்தை நோக்கி குறித்த பேருந்து பயணித்துள்ளது . சாரதியின் நித்திரையால குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
படுகாயமடைந்த நிலையில் அதில் பயணித்த 17 பேரும் மகாஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பதியத்தலாவை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews