G
செய்திகள்உலகம்

இன்று உலக வறுமை ஒழிப்புத் தினமாகும்!

Share

உலக வறுமை ஒழிப்புத் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது.

வறுமை ஒழிப்புத் தினத்தின் கருப்பொருளாக, ‘ஒன்றாக முன்னேறுதல், தொடர்ந்து கொண்டிருக்கும் வறுமையை முடிவுக்குக் கொண்டுவருதல், நமது கிரகத்தையும் அனைத்து மக்களையும் மதித்தல்’ காணப்படுகின்றது.

வறுமையை ஒழிக்கவும் வறுமையில் வாழும் மக்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, 1992 டிசம்பர் 22ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை, ஒக்டோபர் 17 ஐ உலக வறுமை ஒழிப்பு நாளாக அறிவித்திருந்தது.

உலக வங்கியின் கூற்றுப்படி, 2020 ஆம் ஆண்டில் உலகை தாக்கிய கொரோனா 8 முதல் 11 கோடி மக்களை வறுமைக்கு தள்ளியுள்ளதுடன்,தெற்காசிய மற்றும் சஹாரா நாடுகளில் புதிய ஏழைகள் பெரும்பான்மையினர் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு 14 முதல் 16 கோடி ஆக அதிகரித்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ், ‘தற்போது தீவிர வறுமை அதிகரித்து வருகிறது, கொரோனா உலகில் உள்ள நாடுகளின் பொருளாதாரங்கள் மற்றும் சமூகங்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இது உலகின் வடக்கு மற்றும் தெற்கிற்கு இடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளை மேலும் ஆழமாக்கியுள்ளது’ என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 122
செய்திகள்உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை $100-ஐத் தாண்டியது: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடுகிறது அமெரிக்கா!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும்...

world 121
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மாலை நாட்டின் பல பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஏப்ரல் 13, 2026) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை...

world 120
செய்திகள்உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: அவசர உதவிகளை அறிவித்தது ஈராக்!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சுடானி,...

world 119
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு வழிபாட்டிற்காக நாளை இரவு முழுவதும் திறக்கப்படும் ருவன்வெலி மகா சேயா!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆசிகளைப் பெற வரும் பக்தர்களுக்காக, அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச்...