இன்று உகண்டா நாளை லங்கா?

Entebbe Airport

Entebbe_Airport

சீனாவின் பிடிக்குள் உகண்டா சிக்கி தனது விமானநிலையத்தை இழந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

உகண்டா சீனாவிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத காரணத்தால் உகண்டாவின் ஒரேயொரு சர்வதேச விமான நிலையமான என்டெப்பே சர்வதேச விமான நிலையத்தைச் சீனாவிடம் இழந்துள்ளதாக ஆபிரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உகண்டாவினால் என்டெப்பே விமான நிலையத்தை விஸ்தரிப்பதற்க்காக சீனாவிடம் இக் கடன் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உகண்டாவிற்கு, 2015 ஆம் ஆண்டில், சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி சுமார் 207 மில்லியன் டொலரை இரண்டு சதவீத வட்டி அடிப்படையில் கடனாக வழங்கியிருந்தது.

தற்போது கடனை திருப்பி செலுத்தும் காலம் முடிவடைந்த நிலையில் உகண்டா தனது கடனைத் திருப்பச் செலுத்த முடியாமல் போனால், என்டெப்பெ விமான நிலையத்தைச் சீனா கையகப்படுத்திக் கொள்ளலாம் என்று இந்தக் கடன் ஒப்பந்தத்தின் ஒருபகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், உகண்டா ஜனாதிபதி யோவேரி முசேவெனி, தனது உயர்மட்ட குழுவினரைச் சீனாவுக்கு அனுப்பியுள்ளார்.

ஒப்பந்தத்தில் உள்ள இப்பகுதியை நீக்கக் கோரி இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள போதிலும், சீனா தமது ஒப்பந்த விதிகளைத் தளர்த்த முடியாது என மறுத்துள்ளது.

இதனால் , உகண்டா தனது ஒரேயொரு சர்வதேச விமான நிலையத்தைச் சீனாவிடம் பறிகொடுத்துள்ளது.

மேலும் இந்தக் கடன் ஒப்பந்தத்தில் எந்த சர்வதேச பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதால் பிற சர்வதேச அமைப்புகளின் உதவியையும் உகண்டா கோர முடியாத இக்கட்டான நிலைக்கு உகாண்ட தள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, உகண்டா விமான நிலையத்தைச் சீனா கையகப்படுத்துவதாக வெளியான தகவலை உகண்டாவின் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் இவ்வாறு பல வளர்ந்து வரும் நாடுகளுக்கு தனது கடன்களை கொடுத்து பல இடங்களை கையகப்படுத்தியுள்ளது.

இன்னும் எத்தனை நாடுகள் சீனாவின் பிடிக்குள் சிக்கப்போகின்றதோ தெரியவில்லை.

இன்று உகண்டா நாளை லங்கா………..?

#world

Exit mobile version