முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டால் அவரது தொலைபேசியிலுள்ள அனைத்து ஒலிப்பதிவுகளையும் பகிரங்கப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க சிறையில் அடைக்கப்படுவதை எவரும் விரும்பாத காரணத்தினால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்து நிலவுகின்றது. எனவே ரஞ்சன் ராமநாயக்க நீதித்துறைக்கு எதிராக வெளியிடும் கருத்துக்களின் பாரதூரத்தை நாட்டு மக்கள் அறிய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கூறியதற்காக ரஞ்சன் ராமநாயக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எனவே, ரஞ்சன் ராமநாயக்கதொடர்பில், பொலிஸாரால் நீதித்துறை மீது பிரயோகிக்கப்பட்டுள்ள அழுத்தங்களை உரிய குரலை சமூகமயப்படுத்துவதன் மூலம் முழு சமூகமும் அறிந்துகொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews