அரச கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) தலைவராகப் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவுசெய்யப்பட்டார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (10) கூடிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பெயரை முன்மொழிந்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர் அஸோக அபேசிங்ஹ வழிமொழிந்தார்.
பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராகக் கடமையாற்றியிருந்தார்.
அரச செலவுகளை எதிர்நோக்குவதற்காகப் நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட ஒதுக்கீட்டுத் தொகைகளைக் காட்டுகின்ற கணக்குகளையும் குழு தனக்கெனக் கருதும் நாடாளுமன்றத்தின் முன்னிடப்படும் பிற கணக்குகளையும் கணக்காய்வாளர் தலைமையதிபதியின் உதவியுடன் பரிசோதனை செய்வது அரச கணக்குகள் பற்றிய குழுவின் கடைமையாகும்.
#SriLankaNews