இந்தியா திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் பிரமோற்சவம், கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
கொரோனாப் பெருந்தொற்றுக் காரணமாக, ஆலயத்தின் உள்ளே பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பிரமோற்சவ விழா நடைபெற்றது.
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவமானது, தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளதாக திருப்பதி ஏழுமலையான் சந்நிதானத்தினர் அறிவித்துள்ளனர்.
பிரமோற்சவத்தில் வரும் 11ஆம் திகதி கருட உற்சவம் இடம்பெறவிருக்கின்றது.
எதிர்வரும் 15ஆம் திகதி மாலை கொடியிறக்கத்துடன் பிரமோற்சவ விழா நிறைவுக்கு வரவுள்ளது.