வேகக்கட்டுப்பாட்டையிழந்த டிப்பர் வாகனம் ஆடையகத்தில் புகுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
யாழிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் ஒன்றே A9 பிரதான வீதியில் இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
கிளிநொச்சியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் ஒன்று ஆடையகத்திற்குள் புகுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழப்புச் சம்பவங்களும் ஏற்படவில்லை. கடையினுள் உள்ள பல பெறுமதியான பொருட்கள் சேதமடைத்துள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை குறித்த ஆடையகத்தில் பணியாளர்கள் மற்றும் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மக்கள் பலர் நின்றிருந்ததாகவும் இருப்பினும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
#SrilankaNews
Leave a comment