இளம் ஊடகவியலாளரை அழைக்கிறது பயங்கரவாத தடுப்பு பிரிவு!!!

யாழ்.பல்கலைக்கழக மாணவனும் இளம் ஊடகவியலாளருமான பாலசிங்கம் சுஜீவனை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்காக அழைத்துள்ளனர்.

கிளிநொச்சியை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் ஒருவர், விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கம் செய்ய, முகநூல் ஊடாக முனைகிறார் என தேரர் ஒருவர் ஊடக சந்திப்பொன்றில் கூறியுள்ளார்.

இதனையடுத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு, அவரை விசாரணைக்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி காலை 9 மணிக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அழைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

64

#SrilankaNews

Exit mobile version