யாழில் வீதியில் ரோந்து நடவடக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரைக் காணொளியாக பதிவு செய்த மூவர் பருத்தித்துறைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரை விழிப்பது போன்று ஒருவர் பாசாங்கு செய்ய, ஏனைய இரு நண்பர்களும் அக்காட்சியினை காணொளியாகப் பதிவு செய்தார்கள் என பருத்தித்துறை பொலிசாருக்கு இராணுவத்தினர் முறைப்பாடு வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, இராணுவத்தினர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய மூன்று இளைஞர்களும் பருத்தித்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை மூன்று இளைஞர்களிடமும் வாக்கு மூலமும் பெறப்பட்டுள்ளது.
#SrilankaNews
Leave a comment