நோர்வூட் – மஸ்கெலியா வீதியில் கோர விபத்து: 20 அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கரவண்டி; இருவர் காயம்!

image f38ce8fd80

நோர்வூட் – மஸ்கெலியா பிரதான வீதியின் ரொக்குட் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மஸ்கெலியாவிலிருந்து நோர்வூட் நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி, இன்று (11) மாலை 4 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி ஆழமான பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அதிலிருந்த மற்றொருவர் என இருவர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கரவண்டி பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

அதிக வேகம் அல்லது வீதியின் வழுக்கல் நிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Exit mobile version