யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூவர் கொரோனாத் தொற்றால் நேற்று உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 62 வயது ஆண் ஒருவரும், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரும், கொடிகாமத்தைச் சேர்ந்த 69 வயது ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த உயிரிழப்புகளுடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 241 ஆக உயர்ந்துள்ளது.