நாட்டில் கொரோனா பரவலைத் தொடர்ந்து, டெங்கு நோயும், எலிக்காய்ச்சலும் அச்சுறுத்த ஆரம்பித்துள்ளன.
கடந்த ஜூன் மாதம் முதல் இம்மாதம் (ஒக்டோபர்) 20ஆம் திகதி வரையான நான்கு மாதங்களுக்குள் இலங்கையில் எலிக்காய்ச்சல் காரணமாக 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 250 நோயாளர்களும் கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட மற்றும் மாவனெல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews